பாம்புகள் அவற்றின் தோலை உதிர்ப்பதற்கு காரணம் என்ன தெரியுமா !
பூமியில் வாழும் மிகவும் வினோதமான உயிரினங்களில் பாம்புகள் மிகவும் முக்கியமானவை.
பொதுவாக பல்லிகள், ஆமைகள் மற்றும் பாம்புகள் போன்ற அனைத்து ஊர்வனவும் தங்கள் தோலை உதிர்க்கின்றன.
இருப்பினும், பாம்புகள் மட்டுமே தங்கள் தோலை முழுவதுமாக, ஒரே துண்டாக உதிர்க்கின்ற நிலையில் அதற்கான காரணம் என்ன என்பது தொடர்பில் இப்பதிவில் காணலாம் .
இளம் பாம்புகள்
பாம்புகள் தங்கள் தோலை உதிர்ப்பது எக்டிசிஸ் எனப்படும் ஒரு செயல்முறை மூலம் செய்கிறது.
பாம்பின் வயது, இனம் மற்றும் சூழலைப் பொறுத்து இந்த உதிர்தல் மாறுபடும்.
உதிர்தல் மாதத்திற்கு ஒரு முறை இருக்கலாம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்ற நிலையில், இளம் பாம்புகள் வளர்ந்து வரும் போது பெரிய பாம்புகளை விட அதிகமாக தோலை உதிர்ப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாம்புகள் அவற்றின் தோலை உதிர்ப்பதற்கு முக்கிய காரணம், அவை வளர்ந்து கொண்டே இருப்பதால் பழைய தோல் பொருந்தாமல் போகும் என்பதால் ஆகும்.
வளரும் உடல்
பாம்புகள் வளரும் போது அவற்றின் தோல் வளராது இதனால் அவை பழைய தோலின் அடியில் ஒரு புதிய தோலை உருவாக்குகின்றன.
இதனால் பாம்புகள் தங்கள் வளரும் உடல்களுக்கு ஏற்ப தங்கள் பழைய தோலை முழுவதுமாக உதிர்க்கிறது.
அத்தோடு, தங்களின் தோலை உரிப்பதால் அவற்றின் தோலில் குடியேறி இருக்கும் பாக்டீரியா அல்லது ஒட்டுண்ணிகளையும் அகற்றும்.
குறிப்பாக பழைய தோலை உதிர்ப்பது சிறிய காயத்திலிருந்தும் குணமடையவும், அவற்றின் தோலின் ஆரோக்கியத்தைப் பராமரிக்கவும் உதவுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
