30 நிமிடங்கள் நீடிக்கப்பட்ட பாடசாலை நேரம்: வெளியானது காரணம்!
பாடசாலை நேரம் 30 நிமிடங்கள் அதிகரிக்கப்பட்டமைக்கான காரணத்தை பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய வெளியிட்டுள்ளார்.
ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் வகையில் பிரதமர் இதனை தெரிவித்துள்ளார்.
அதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், “ஒரு பாடநேரம் தற்போது 45 நிமிடமாக நீட்டிக்கப்பட்டுள்ளது. இது, ஆசிரியர்கள் பாடங்களை விரைவில் முடிக்க வேண்டிய நிலையை தவிர்த்து, மாணவர்கள் ஈடுபடும் செயற்பாடுகளுக்காக கூடுதல் நேரம் வழங்கும் நோக்கில் செய்யப்பட்டுள்ளது.
நடைமுறை செயற்பாடுகள்
குழுக்களில் ஆராய்ச்சி, விளக்கக்க் காணொளிகள், விளக்கப்படங்கள் போன்ற நடைமுறை செயற்பாடுகள் இப்போது பாடத்திட்டத்தில் அதிகமாக இடம் பெற்றுள்ளன.
முதலில் பாடசாலைகளை காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை இயக்க முன்மொழியப்பட்டது. ஆனால் போக்குவரத்து உள்ளிட்ட நடைமுறை சிக்கல்களை கருத்தில் கொண்டு, பாதி மணி நேரம் மட்டுமே நீட்டிக்க தீர்மானிக்கப்பட்டது.” என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
