சர்வகட்சி மாநாட்டை ஏன் புறக்கணித்தேன்! ஜீவன் தொண்டமான் விளக்கம்
Colombo
Economy
Jeevan Thondaman
SriLanka
All-Party Conference
By Chanakyan
அமைச்சுப் பதவி வழங்கப்படவில்லை என்பதற்காக சர்வகட்சி மாநாட்டை புறக்கணிக்கவில்லை என்று இலங்கை தொழிலாளர் காங்கிரசின் பொதுச் செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் (Jeevan Thondaman) தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தென்னிலங்கை ஊடகமொன்றின் கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
நாளைய தினம் நடைபெறவுள்ள சர்வகட்சி கூட்டத்தை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் புறக்கணிக்கத் தீர்மானித்துள்ளது.
இந்த தீர்மானமானது, இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானுக்கு அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சுப் பதவி ஒன்றை வழங்க அரசாங்கம் மறுத்ததன் விளைவாகவே மேற்கொள்ளப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், சர்வகட்சி கூட்டத்தின் மீது நம்பிக்கையில்லை என்பதாலேயே இந்த தீர்மானத்தை எடுத்திருப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி