தானா சேர்ந்த கூட்டம்
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, அம்பாந்தோட்டையிலுள்ள தங்காலை கால்டன் இலலத்திற்கு சென்ற பின்னர் அவரை சுற்றி இதுநாள்வரை சுகபோகம் அனுபவித்தவர்கள் அனைவரும் போடும் கூப்பாடு இதுநாள்வரை ஓய்ந்தபாடாக இல்லை என்கின்றனர் பொதுஜனங்கள்
அவர்கள் இதற்கு கூறும் காரணம் 30 வருடகாலமாக நடந்த யுத்தத்தை முடிவிற்கு கொண்டு வந்து இந்த நாட்டை பயங்கரவாதத்தின் பிடியிலிருந்து மீட்டவர் அவர்தான் என.
இலங்கை திருநாட்டில் 30 வருடகால ஆயுதப்போராட்டம் ஏன் தோன்றியது அதற்கான காரணம் என்ன என்பது வேறுவிடயம்.
ஆனால் இந்த முப்பது வருட கால யுத்தத்தை மகிந்த தோற்கடிக்கவில்லை என்பதை நீங்கள் நம்புவீர்களா என அதிர்ச்சியளிக்கும் வகையில் கேட்டார் ஒரு அன்பர்.
நானும் அதிர்ந்துதான் போனேன். அதெப்படி சிங்கள மக்களும் மகிந்தவை சுற்றியுள்ள பரிவாரங்களும் அவர்தான் இந்த யுத்தத்தை முடித்து வைத்தனர் என்கின்றனரே நீங்கள் என்ன புதுக்கதை விடுகிறீர்கள் என்றேன்.
மகிந்த யுத்தத்தை இராணுவ ரீதியாக அதாவது இந்தியா உட்பட பல்வேறு நாடுகளின் உதவியுடன் வெற்றி கொண்டார். அதற்கு அத்திவாரம் போட்டவரே ரணில் விக்ரமசிங்கதான் என்ற கருத்து இன்றும் காணப்படுகிறது.
கிழக்கு மாகாணத்தில் விடுதலைப்புலிகளின் தளபதியாக இருந்த கருணாவை அம்மாவட்டத்தில் மற்றுமொரு இன்தைச் சேர்ந்த எம்பியாக இருந்த ஒருவர் மூலமாக தொடர்பை ஏற்படுத்தி அவருக்கு ஆசை காட்டி விடுதலை புலிகள் அமைப்பிலிருந்து ப்பிரித்து அந்த அமைப்பிற்கு பாரிய பிளவை ஏற்படுத்தயவரே ரணில்தான்.
ரணிலின் இந்த நரித்தந்திர வேலையால் தான் மகிந்த புலிகளை இலகுவில் வெல்ல முடிந்துது. இது யார் மறுத்தாலும் அதுதான் உண்மை.
ஏனெனில் கருணாவுடன் நின்றவர்கள் இராணுவத்துடன் இணைந்து சந்துபொந்து இடமெல்லாம் காட்டிக் கொடுத்தார்கள்.
முன்னர் தம்முடன் நின்று களமாடியவர்களை எல்லாம் அவர்கள் இராணுவத்துடன் இணைந்து வேட்டையாடினார்கள்.
இது மகிந்தவிற்கு பெரும் சாதகமாக முடிந்தது. இப்போது புரிகிறதா மகிந்த எப்படி யுத்தத்தை வெற்றி கொண்டார் என்று.
உண்மையில் சிங்கள மக்கள் தூக்கி கொண்டாட வேண்டியவர் மகிந்த அல்ல ரணிலைத்தான் என்று சான்றுரைத்தார்.
அப்படியென்றால் மகிந்தவை ஏன் அவர்கள் தூக்கி வைத்து கொண்டாடுகிறார்கள் என்றுகேட்டேன்.
அதற்கு அவர், அவர்கள் எல்லாம் தானா சேர்ந்த கூட்டம் என்றார். விளங்கவில்லை என்றேன். இதற்கு மேல் சொல்ல முடியாது என்றார்.
இப்போது புரிகிறதா ரணிலா மகிந்தவா சிங்கள மக்களுக்கு உயர்ந்தவர் என்று...
