ஒரேநாளில் கொரோனா உயிரிழப்பு அறிவித்தல் அதிகம் வருவது ஏன்? வெளியானது காரணம்
பலநாட்களுக்கு முன்னர் கொரோனாவைரசினால் உயிரிழந்தவர்கள் ஏன் ஒரே நாள் உயிரிழப்பிற்குள் சேர்த்து அறிவிக்கப்படுகின்றனர் என்பதற்கான காரணத்தினை சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
நாட்டில் இடம்பெறும் சில உயிரிழப்புக்கள் கொரோனாவால் ஏற்பட்டதுதானா என உறுதி செய்வதற்கு பல நாட்கள் எடுப்பதன் காரணமாகவே பல நாட்களுக்கு முன்னர் கொரோனாவால் உயிரிழந்தவர்களையும் சேர்த்து ஒரே நாளில் அறிவிக்க வேண்டிய நிலை ஏற்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் எனஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளதாவது,
குறிப்பிட்ட வழிகாட்டுதல்களை பின்பற்றியே உயிரிழப்புகளை உறுதி செய்யவேண்டியுள்ளது. உயிரிழப்புகளை அறிவிப்பது சுகாதாரதரப்பினரின் திறமையின்மையால் தாமதமாகின்றது என்பது அர்த்தமில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
உயிரிழப்புகளை மறைக்கும் அல்லது மிகைப்படுத்தும் நோக்கமில்லை எனவும்
கொவிட் 19 தொடர்பான விடயங்களில் சுகாதார தரப்பினர் நேர்மையுடன் நடந்துகொள்கின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.