இலங்கையில் மட்டும் ஏன் இந்தக் கொள்ளை?
இலங்கையில் PCR பரிசோதனை மேற்கொள்வதற்கு அதிக பணம் அறவிடப்படுவதாக ஐக்கிய மக்கள் சக்தி குற்றம் சுமத்தியுள்ளது.
PCR பரிசோதனைக்கு அதிகளவு பணம் அறவிட்டு உயர் அதிகாரிகள் மடியை நிரப்பிக் கொள்கிறார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹுமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
தனியார் துறைகளில் PCR பரிசோதனை சுமார் 8000 ரூபாவிற்கும் மேற்கொள்ளப்படுவதாகவும் அரசாங்கம் அதனை 6500 ரூபாவரை குறைத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
தமிழ்நாடு எப்பலோ வைத்தியசாலையில் இலங்கை ரூபாவின்படி 2600 ரூபாவே PCR பரிசோதனைக்கு அறவிடப்படுகிறது.
பங்களாதேஷில் 2300 ரூபாவிற்கு PCR பரிசோதனை செய்யப்படுகிறது. இதனுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் இரண்டு மூன்று மடங்கு அதிக பணம் அறவிடப்படுகிறது.
ஏற்கனவே கஸ்டப்பட்டுக் கொண்டிருக்கும் மக்களிடம் ஏன் இப்படி பணக் கொள்ளையில் ஈடுபடுகிறார்கள் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.