ரணிலுக்கு வித்தியாசமான ஆசை ஏற்பட்டுள்ளதாம்! ஹர்ஷண ராஜகருண கிண்டல்
சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்கவிற்கு மாதம் ஒரு தடவை வெளிநாடு செல்வதற்கு ஆசை ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷண ராஜகருண குற்றம்சாட்டியுள்ளார்.
அத்துடன் வெளிநாடு செல்வது அவரது தனிப்பட்ட விருப்பம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் வெளிநாட்டு விஜயம் தொடர்பில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில் அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
மக்கள் ஆணை இல்லாத நபர்
அவர் மேலும் தெரிவிக்கையில், ''மக்களின் ஆணை இல்லாத ஒருவர் நாட்டில் அதிபராக பதவி வகிக்கிறார்.
மக்கள் ஆணையுடன் அரசாங்கம் ஒன்றை அமைக்குமாறு முழு உலகமும் கோருகின்றது. மக்கள் ஆணையில் ஒரு அரசாங்கத்தை நிறுவினால் மட்டுமே உலக நாடுகள் எமக்கு உதவிகளை வழங்கும்.
எனினும் மக்களினால் விரட்டியடிக்கப்பட்ட அரசாங்கம் ஒன்றினால் முன்வைக்கப்படும் கோரிக்கைகளுக்கு உலக நாடுகள் மதிப்பளிக்காது என சுட்டிக்காட்டியுள்ளார்.