முல்லைத்தீவிலிருந்து வவுனியா சென்ற மனைவி மாயம் -தவிக்கும் கணவன் மற்றும் பிள்ளைகள்

police vavuniya investigation mullaithivu
By Jaso Nov 24, 2021 10:35 PM GMT
Report

முல்லைத்தீவு நாயாறு பகுதியில் இருந்து கடந்த 05-11-2021 அன்று வவுனியாவுக்கு புடவைகள் மற்றும் பொருட்கள் வாங்குவதற்காக சென்ற நாயாறு பகுதியை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயான சிவகுமார் ஜெயந்தி எனும் 42 வயதுடைய பெண் இன்றுவரை வீடுதிரும்பாத நிலையில் முல்லைத்தீவு காவல் நிலையத்தில் கணவர் முறைப்பாடு அளித்துள்ளார்.

குறித்த பெண் காணாமல் போன இரண்டு தினங்களில் முல்லைத்தீவு காவல் நிலையத்தில் கணவனால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளபோதிலும் இன்று வரை மனைவி தொடர்பான எந்த தகவல்களும் கிடைக்கவில்லை என்றும் காவல்துறையினரும் தனது மனைவியை தேடி தர அக்கறை காட்டவில்லை என்றும் தாயை காணாத நிலையில் பிள்ளைகள் தவித்து வருவதாகவும் தெரிவிக்கும் கணவன் தன்னுடைய மனைவி தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் தனது 0765350421 எனும் குறித்த தொலைபேசி இலக்கத்துக்கு தகவல் தருமாறும் கோரியுள்ளார்.

இதேவேளை காவல்துறையினர் தனது மனைவியை தேடித்தர விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோருகின்றார். தாய் காணாமல் போன நிலையில் 15 வயதுடைய ஆண் மகன் மற்றும் 12 வயதுடைய மகள் மற்றும் 7 வயதுடைய மகள் ஆகியோர் தாயை காணவில்லை என மிகுந்த சோகத்தில் வாடுகின்றனர். 



Gallery
ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016