கொரோனாவினால் உயிரிழந்த மனைவி - கணவனின் நெஞ்சை உருக்கும் செயல்
இந்தியாவின் ஷாஜபூரில் இருந்து 3 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள சம்ப்கேடா கிராமத்தை சேர்ந்த நாராயண் சிங் ரத்தோர் என்பவர் கொரோனாவினால் உயிரிழந்த மனைவிக்கு கோயில் கட்டி வழிபாடு செய்து வருகிறார் என இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஷாஜபூரில் இருந்து 3 கிலோ மீற்றர் தொலைவிலுள்ள சம்ப்கேடா கிராமத்தை சேர்ந்தவர் நாராயண் சிங் ரத்தோர். அவரது மனைவி கீதாபாய்.
இவர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். கொரோனா 2ஆவது அலையில் அவரது மனைவி கீதாபாய் இறந்து விட்டார்.
அவரது நினைவாக இருந்த நாராயண் சிங் ரத்தோர், மனைவிக்கு ஒரு கோயிலை கட்ட முடிவு செய்தார். அதன்படி காதல் மனைவியின் சொந்த இடத்தில் கோயிலை கட்டி தனது மனைவியின் சிலையை நிறுவினார்.
அது மட்டுமல்லாது அவர்கள் தினந்தோறும் வழிபாடு செய்து வருகிறார்.
ரத்தோரின் மூத்த மகன் லக்கி இது தொடர்பில் தெரிவிக்கையில், “இந்த கோவில் என் தாய் எங்களை சுற்றி இருக்கிறார் என்ற உணர்வை தருகிறது” என்று தெரிவித்துள்ளார்.