தமிழர் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட இளம் யுவதி
Sri Lanka Police
Tamils
Trincomalee
Sri Lanka Police Investigation
By Shadhu Shanker
திருகோணமலை மூதூர் பகுதியில் குடும்பத் தகராறு காரணமாக இளம் யுவதியொருவர் அவரது கணவரால் கொலை செய்யப்பட்ட சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
உயிரிழந்தவர் அல்லே நகர் தோபூர் பகுதியைச் சேர்ந்த 28 வயதுடையவர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குடும்பத் தகராறு
இந்த கொலை சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
மூதூரில் வீடொன்றில் நேற்று(8) காலை பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக காவல்நிலையத்தில் முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது.
அதனைதொடர்ந்து விசாரணையை ஆரம்பித்த காவல்துறையினருக்கு குடும்பத் தகராறு காரணமாக உயிரிழந்த பெண்ணின் கணவரே கொலை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மூதூர் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 3 நாட்கள் முன்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி