பாகிஸ்தான் தேர்தல் முடிவுகளில் பரபரப்பு: இம்ரான்கான் கட்சி முன்னிலை
பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தலில் இம்ரான் கானின் பிடிஐ கட்சியினர் அதிக இடங்களில் முன்னிலை வகிப்பதாக அக்கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
இரட்டை குண்டுவெடிப்பு பதற்றத்தின் மத்தியில் பாகிஸ்தானில் நேற்று(8) பொதுத்தேர்தல் நடைபெற்றது. நேற்று(8) காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெற்றது.
பாகிஸ்தானில் மொத்தம் 336 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன.இதில் 60 இடங்கள் பெண்களுக்காகவும், 10 இடங்கள் சிறுபான்மை மக்களுக்காகவும் ஒதுக்கப்பட்டு உள்ளன.
பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தல்
மீதம் உள்ள 266 தொகுதிகளுக்கும் நேரடியாக மக்கள் மூலம் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றதோடு பஞ்சாப், சிந்து, கைபர் பக்துங்க்வா, பலுசிஸ்தான் ஆகிய மாகாணங்களுக்கும் நேற்று தேர்தல் நடைபெற்றது.
இதற்காக நாடு முழுவதும் 90 ஆயிரத்து 582 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன. மேலும் பதற்றதமான சூழ்நிலைகாரணமாக தேர்தல் பாதுகாப்பு பணியில் சுமார் 65 ஆயிரம் பாதுகாப்பு படையினர் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.
தேர்தல் முடிந்ததும் வாக்கு எண்ணும் பணி ஆரம்பமாகியது. தேர்தலை பொறுத்தவரை முன்னாள் பிரதமர்களான இம்ரான்கானின் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி, நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் ஆகிய கட்சிகளிடையே கடும் போட்டி நிலவுகிறது.
இம்ரான்கான் கட்சி முன்னிலை
இந்நிலையில், இம்ரான் கானின் பிடிஐ கட்சியினர் அதிக இடங்களில் முன்னிலை வகிப்பதாக அக்கட்சியினர் தெரிவித்துள்ளனர். மேலும், பல இடங்களில் தேர்தல் முடிவுகளை வெளியிடாமல் நிறுத்தி வைத்து இருப்பதாகவும் பிடிஐ கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.
கடந்த 2018-ஆம் ஆண்டு நடைபெற்ற முந்தைய பொதுத் தோ்தலில் அதிக இடங்களைக் கைப்பற்றி ஆட்சியமைத்த முன்னாள் பிரதமா் இம்ரான் கான், ஊழல் மற்றும் ரகசியக் காப்புறுதி மீறல் வழக்குகளில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா்.
மேலும், இம்ரான்கானின் பிடிஐ கட்சிக்கு துடுப்பாட்ட மட்டை சின்னம் வழங்க தேர்தல் ஆணையம் தடை விதித்ததுள்ளதால் இம்ரான் கான் கட்சியினர் சுயேட்சையாக போட்டியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |