உறங்கிக் கொண்டிருந்த கணவனுக்கு தீவைத்த மனைவி - கால்கள் எரிந்து கருகின
Sri Lanka Police Investigation
Fire
By Sumithiran
குடும்ப தகராறு காரணமாக மனைவி தனது கணவரை தீ வைத்து கொளுத்தியுள்ளதாக மொரட்டுமுல்ல காவல்துறையினர் தெரிவித்தனர்.
சந்தேகநபரின் மனைவி நீண்ட நாட்களாக வேறு ஒருவருடன் தொடர்பு வைத்திருந்ததாகவும், அந்த உறவின் காரணமாக தம்பதியினருக்கு இடையில் அவ்வப்போது தகராறுகள் ஏற்பட்டு வந்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
களுபோவில வைத்தியசாலையில் அனுமதி
இந்த நிலையில் கணவர் உறங்கிக் கொண்டிருந்த போது, மனைவி அவரது உடலில் தீ வைத்து எரித்ததில், கணவரின் கால்கள் முற்றாக எரிந்தன.
கணவர் சிகிச்சைக்காக களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
