பொன்சேகாவை தொடர்ந்து விஜயதாசவின் அதிரடி அறிவிப்பு
2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தானும் களமிறங்கப் போவதாக நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ (Wijeyadasa Rajapakshe) அறிவித்துள்ளார்..
விசேட செய்தியாளர் மாநாடு ஒன்றில் கலந்து கொண்ட போது அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், மக்கள் கூட்டணியின் சார்பில் வேட்பாளராகக் களமிறங்குவதாகவும், சின்னத்தை பின்னர் அறிவிப்பதாகவும் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
வேட்பாளர் பட்டியல்
இலங்கையினதும், இலங்கை மக்களினதும் வெற்றியை முன்னிறுத்தியே எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராகக் களமிறங்குவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலில், சஜித் பிரேமதாச, அநுர குமார திசாநாயக்க, திலித் ஜயவீர், சரத் பொன்சேகா ஆகியோரும் இருக்கின்றனர்.
தேர்தலுக்கான திகதி
எவ்வாறாயினும், ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதியை அறிவிப்பதற்கான தேர்தல் ஆணைக்குழுவின் விசேட கூட்டம் இன்று கூடவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இதன் படி, ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி அடுத்த வாரம் அறிவிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |