பலியாகும் மனிதர்கள் மற்றும் யானைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு..!
Sri Lanka
Sri Lankan Peoples
Death
By Kiruththikan
கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் காட்டு யானை தாக்குதல் மற்றும் மனித செயற்பாடுகள் காரணமாக மனிதர்களினதும் யானைகளினதும் உயிரிழப்புகள் அதிகரித்துள்ளன.
வனஜீவராசிகள் திணைக்களத்தினரின் தரவுகளுக்கு அமைய கடந்த 3 மாதங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட யானைகள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
மனித செயற்பாடுகள் மற்றும் தொடருந்து விபத்துகள் என்பன காரணமாக இந்த அளவான யானைகளின் உயிரிழப்பு பதிவாகியுள்ளது.
அத்துடன் காட்டு யானை தாக்குதல் காரணமாக கடந்த மூன்று மாதங்களில் 20க்கும் மேற்பட்ட நபர்கள் உயிரிழந்தனர்.
கடந்த ஆண்டு 439 யானைகள் உயிரிழந்ததுடன் காட்டு யானை தாக்குதல் காரணமாக 140 மனிதர்கள் கொல்லப்பட்டனர்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்