கதிர்காமத்திற்கு 40 பயணிகளுடன் சென்ற பேருந்தை தாக்கிய யானை: 25 பேர் வைத்தியசாலையில்!
🛑 புதிய இணைப்பு
கதிர்காமம் - புத்தல வீதியில் பேருந்தொன்று கவிழ்ந்து விபத்திற்குள்ளாகியதில் 25 பேர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
🛑 முதலாம் இணைப்பு
கதிர்காமம் - புத்தல வீதியில் பேருந்தொன்று கவிழ்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளது.
யானை ஒன்று குறித்த பேருந்தை தாக்கியதால் இவ்விபத்து நேர்ந்துள்ளது.
குறித்த விபத்து சம்பவம் இன்று (03-09-2026) இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நிலைமை கவலைக்கிடம்
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், கதிர்காமம் காவல் பிரிவுக்குட்பட்ட கதிர்காமம் - புத்தல வீதியில் இன்று (03-09-2026) காலை மின்சார வேலி காவலரணுக்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சிலாபத்திலிருந்து கதிர்காமத்திற்கு யாத்திரை சென்ற குழுவினரை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்து, புத்தல - கதிர்காமம் வீதியால் பயணித்துக் கொண்டிருந்த போதே வீதியிலிருந்த காட்டு யானை அதனை தாக்கியுள்ளது.

யானையின் தாக்குதலால் வீதியை விட்டு விலகி பேருந்து கவிழ்ந்துள்ளதுடன் விபத்து இடம்பெற்ற போது அதில் சுமார் 40 பயணிகள் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதில் பேருந்தில் இருந்த 10 பேர் காயமடைந்து கதிர்காமம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
எவ்வாறாயினும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட காயமடைந்தவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |



