தொடருந்தில் மோதி காட்டு யானை உயிரிழப்பு
கொழும்பிலிருந்து (Colombo) மட்டக்களப்பு (Batticaloa) நோக்கிச் சென்ற ரயில் மோதி காட்டு யானை ஒன்று உயிரிழந்துள்ளது.
இந்த விபத்து இன்றைய தினம் (18.07.2025) கல்லெல்ல பகுதியில் அதிகாலை 5:30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இந்த யானை அதிகாலை 3 மணி முதல் கிராமத்தில் சுற்றித் திரிந்து, அப்பகுதியில் உள்ள நெல் வயல்களுக்குள் நுழைவது வழக்கமாக கொண்டிருந்துள்ளது.
வனவிலங்கு பாதுகாப்பு
இன்யைதினம் யானை வந்தபோது வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களத்தை தொடர்பு கொள்ள முயற்சி செய்த போதிலும், ஆனால் அந்நேரத்தில் அதிகாரிகளைத் தொடர்பு கொள்ள முடியவில்லை என கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

அண்மைய வாரங்களில் அடிக்கடி யானை கிராமத்திற்குள் வந்து சென்றுள்ள நிலையில், தடுப்பு நடவடிக்கைகளை வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம் எடுக்கத் தவறியுள்ளது.
விரைந்து நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த துயர சம்பவத்தை தவிர்த்து இருக்கலாம் என கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
திருச்செந்தூர் கந்த சஷ்டி திருவிழா 2025
ஈழ விவகாரத்தில் கடமை தவறிய ஐ.நா! 1 நாள் முன்