ஒன்பது நாட்களில் 20 பேரைக் கொன்ற காட்டு யானை
கிழக்கு இந்திய மாநிலமான ஜார்க்கண்டில் ஒரு காட்டு யானை ஒன்பது நாட்களில் 20 பேரைக் கொன்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த மாதம் 1 முதல் 9 ஆம் திகதி வரை மேற்கு சிங்பூம் பகுதியில் 19 கிராமவாசிகளும் ஒரு வனவிலங்கு அதிகாரியும் கொல்லப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ட்ரோன்களை பயன்படுத்தி கண்காணிப்பு
வனவிலங்கு அதிகாரிகள் ட்ரோன்களைப் பயன்படுத்தி தாக்கும் யானையைக் கண்காணித்து வந்தாலும், அதைப் பிடிக்க இன்னும் முடியவில்லை என்று வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

யானையைக் கண்டுபிடிக்க 100க்கும் மேற்பட்ட வனவிலங்கு அதிகாரிகளை உள்ளடக்கிய ஒரு பெரிய தேடுதல் நடவடிக்கை நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதிக எண்ணிக்கையிலான இறப்புகள்
"இது முன்னெப்போதும் இல்லாத சூழ்நிலை. இப்பகுதியில் ஒரு யானை காரணமாக இவ்வளவு அதிக எண்ணிக்கையிலான இறப்புகள் பதிவாகியிருப்பது இதுவே முதல் முறை" என்று நாட்டின் பிராந்திய வனவிலங்கு அதிகாரி குல்தீப் மீனா தெரிவித்தார்.

இறந்தவர்களின் குடும்பங்களுக்கு அந்நாட்டு அதிகாரிகள் நிதி இழப்பீடு அறிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |