கிளிநொச்சியில் காட்டு யானை அச்சுறுத்தல்
Kilinochchi
Sri Lanka
Sri Lankan Peoples
By Raghav
கிளிநொச்சி (Kilinochchi) - கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தர்மபுரம் பகுதியில் மக்கள் குடியிருப்புக்குள் காட்டு யானை ஒன்று புகுந்து பாரிய சேதம் விளைவித்துள்ளது.
குறித்த சம்பவம் இன்று (01.08.2024) அதிகாலை 1.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
யானை வெடி
இதன்போது, வாழ்வாதாரத்திற்காக செய்கை மேற்கொள்ளப்பட்ட இருபதுக்கு மேற்பட்ட வாழைகள், 1/4 ஏக்கரில் செய்கை மேற்கொள்ளப்பட்ட சோழம், பலாக் காய்கள், தென்னை உள்ளிட்டவை யானையால் முற்று முழுதாக சேதப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், குறித்த பகுதிக்குள் இன்றிரவும் யானை வரலாம் என்ற அச்சத்தில் இருப்பதாகவும் தமது பாதுகாப்பிற்காக யானை வெடியை தந்ததுமாறு அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்