முல்லைத்தீவில் 130 நபர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்துள்ள வனஜீவராசிகள் திணைக்களத்தினர்(படங்கள்)

Mullaitivu Sri Lanka Sri Lanka Magistrate Court Department Of Wildlife
By Shadhu Shanker Dec 07, 2023 03:03 PM GMT
Report

கரியல்வயல் சுண்டிக்குளம் பகுதிகளை அண்மித்துள்ள 130 நபர்களுக்கு எதிராக வனஜீவராசிகள் திணைக்களத்தினர் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.

1908ஆம் ஆண்டு தொடக்கம் மக்கள் பயிர் செய்து வாழ்ந்துவரும் நிலையில் குறித்த இடத்தில் உள்ள மக்கள் தம் காணிகளை துப்பரவு செய்தமையை அடுத்து வனஜீவராசிகள் திணைக்களத்தினர் அது தமக்குரிய காணி என முல்லைத்தீவு நீதிமன்றில் தாக்கல் செய்திருந்தனர்.

சுண்டிக்குளம் தேசிய பூங்காவிற்குள் உட்சென்றமை , தாவரங்களை வெட்டி வெளியாக்கியமை , காணிகளை வெளியாக்கியமை, பாதைகளை அமைத்தல் மற்றும் பாதைகளை பயன்படுத்தியமை போன்ற காரணங்களை முன்வைத்து குறித்த வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு வாகன விபத்து: இளைஞர் வைத்தியசாலையில் அனுமதி(படங்கள்)

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு வாகன விபத்து: இளைஞர் வைத்தியசாலையில் அனுமதி(படங்கள்)

வழக்குகள் பதிவு

குறித்த வழக்கானது இன்றைய தினம்(7) முல்லைத்தீவு நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டதன் பின்னர் சட்டத்தரணி சி.தனஞ்சயன் கருத்து தெரிவிக்கையில்,

முல்லைத்தீவில் 130 நபர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்துள்ள வனஜீவராசிகள் திணைக்களத்தினர்(படங்கள்) | Wildlife Department Case 130 People Mullaitivu

“இன்றையதினம் முல்லைத்தீவு மாவட்டத்திலே சுண்டிக்குளம் பிரதேசத்தை ஒட்டிய பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு எதிராக வன ஜீவராசிகள் திணைக்களம் வழக்குகளை முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றிலே தாக்கல் செய்துள்ளார்கள்.

அந்த வழக்கிலே அத்துமீறி குறித்த மக்கள் குடியிருந்ததாகவும், தாவரங்களை அழித்ததாகவும் வழக்கு தாக்கல் செய்திருந்தார்கள்.

சுண்டிக்குள பிரதேசத்தில் இருந்து ஆறு கிலோ மீற்றர் தூர தொலைவில் இருக்கும் மக்களுக்கு எதிராகவும், இறந்த மக்களுக்கு எதிராகவும், ஒரு நபருக்கு எதிராக மூன்று நான்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

 மக்களின் நில உரிமை

வன ஜீவராசிகள் திணைக்களத்தினர், நில அளவை திணைக்களத்தினர் சரியான வரைபடங்களையோ, எந்த காலப்பகுதியில் அது சரணாலயமாக இருந்தது என்பதற்கான எந்த வித தகவல்களும் இல்லாத நிலையில் போலியான விசாரணையை நடாத்தி இந்த வழக்கினை தாக்கல் செய்துள்ளார்கள். 

முல்லைத்தீவில் 130 நபர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்துள்ள வனஜீவராசிகள் திணைக்களத்தினர்(படங்கள்) | Wildlife Department Case 130 People Mullaitivu

நீதிமன்றிலே இவ்வழக்கானது அடிப்படை ஏதுகள் அற்ற நிலையிலையே கொண்டுவரப்பட்டதும், மக்களின் நில உரிமையினை பறிக்கும் அரசியல் நோக்கத்திற்காகவே இந்த வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருக்கலாம் என்பதையும் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தோம்.

மேலதிக விசாரணைகளை வழக்கு தொடுநர் தரப்பு செய்ய வேண்டும் எனவும் நீதவானால் பணிக்கப்பட்டிருந்தது.” என்றார். குறித்த வழக்கானது அடுத்த வருடம் மே மாதம் 2ம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டிக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

சிங்கள பெண்ணை காதலிக்கும் சாணக்கியன்: சர்ச்சையை கிளப்பிய மொட்டு எம்.பி (காணொளி)

சிங்கள பெண்ணை காதலிக்கும் சாணக்கியன்: சர்ச்சையை கிளப்பிய மொட்டு எம்.பி (காணொளி)

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பாண்டியன்குளம்

24 Sep, 2026
மரண அறிவித்தல்
17ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, வெள்ளவத்தை

27 Sep, 2011
25ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், சுவிஸ், Switzerland

27 Sep, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
நன்றி நவிலல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
நன்றி நவிலல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

26 Sep, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, காங்கேசன்துறை, London, United Kingdom

26 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி

24 Sep, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, Villejuif, France

25 Sep, 2018
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி இராமநாதபுரம், Zürich, Switzerland, Brampton, Canada

22 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026