டயானாவின் கோரிக்கை ரஷ்ய படையெடுப்பை நிறுத்துமா?
உக்ரைனில் ரஷ்யா நடத்தும்தாக்குதல் குறித்து இரு நாடுகளும் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் டயானா கமகே தெரிவித்துள்ளார்.
"யுத்தத்தால் ஏற்பட்ட துன்பங்களை நாங்கள் நன்கு அறிவோம். போருக்குப் பிறகு நாங்கள் எங்கள் தேசத்தை மீண்டும் கட்டியெழுப்புகிறோம்.
நாங்கள் ரஷ்யா மற்றும் உக்ரைனுடன் இருதரப்பு உறவுகளைப் பேணுகிறோம். அந்த நாடுகளில் ஏதேனும் பாதிக்கப்பட்டால், அது எங்களுக்கும் வலிக்கிறது.
"எங்களுக்கு அந்த அனுபவம் உள்ளது. எங்கள் முடிவை மறுபரிசீலனை செய்ய இரு நாடுகளிலும் உள்ள எங்கள் நண்பர்களையும், அரச தலைவர் புடினையும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம் எனத் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள டயான கமகே தற்போது அரசாங்கத்திற்கு தனது முழுமையான ஆதரவை தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
