எரிபொருள் விலை அதிகரிக்குமா ...! வெளியான தகவல்
Fuel Price In Sri Lanka
Sri Lanka
Sri Lanka Fuel Crisis
By Jaso
எரிபொருள் விலையில் திருத்தம்
விலை சூத்திரத்துக்கு அமைய, எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்வதற்கான கணிப்பீட்டுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர் மாபா பத்திரண தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, 2 வாரங்களுக்கோ அல்லது மாதத்திற்கு ஒரு முறையோ எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளக்கூடிய நிலை உள்ளது.
உறுதியான தீர்மானம் இல்லை
எனினும், விலை சூத்திரத்தை அமுலாக்கி, எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படும் தினம் இதுவரையில் உறுதியாக தீர்மானிக்கப்படவில்லை என்று மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர் மாபா பத்திரண மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை விலை அதிகரிப்பு ஒருபுறம் இருக்க நாட்டில் தொடரந்தும் எரிபொருளுக்கு பாரிய தட்டுப்பாடு நிலவுவதுடன் எரிபொருளை வழங்கக்கோரி மக்கள் இன்றையதினமும் பல்வேறு இடங்களில் போராட்டங்களில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்