பெப்ரவரியில் 30 ஆம் திகதி வருமா..! இலங்கை அரச அலுவலகத்தின் பொறுப்பற்ற செயல்
Ampara
Department of Motor Vehicles
By Sumithiran
பொதுவாகவே பெப்ரவரி மாதம் 28,அல்லது 29 ஆம் திகதியே வருவது வழமை. ஆனால் இலங்கையில் உள்ள அரச திணைக்களம் ஒன்று பெப்ரவரி மாதம் சோதனைக்கான திகதியை 30 என பதிவிட்டு விண்ணப்பதாரருக்கு அனுப்பி வைத்துள்ளது.
அம்பாறை மோட்டார் பதிவு திணைக்களத்தால் இந்த செயற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சாரதி அனுமதிப்பத்திர சோதனை திகதி
சாரதி பயிற்சியில் ஈடுபட்டிருந்த ஒருவர், சாரதி அனுமதிப்பத்திரத்தை எடுப்பதற்காக விண்ணப்பித்துள்ளார்.
இவ்வாறு விண்ணப்பித்தவருக்கு சோதனை திகதியே மேற்கண்டவாறு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு பெப்ரவரி மாதம் 30 ஆம் திகதி சோதனைக்கு அழைக்கப்பட்டதனால் விண்ணப்பதாரி என்ன செய்வதென தெரியாது விழி பிதுங்கி நிற்கின்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 3 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி