கொளத்தூர் தொகுதியில் மீண்டும் மு.க.ஸ்டாலின் போட்டி - வலுக்கும் அழுத்தம்
கொளத்தூர் தொகுதி எம்எல்ஏவாக இருந்த வி.எஸ். பாபு உயிரிழந்ததைத் தொடர்ந்து, அந்தத் தொகுதியில் அடுத்ததாக திமுக சார்பில், போட்டியிடப்போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
வி.எஸ்.பாபு எம்.எல்.ஏ. மரணம் அடைந்ததை தொடர்ந்து, கொளத்தூர் தொகுதி இடைத் தேர்தலில் மு.க.ஸ்டாலின் மீண்டும் போட்டியிட வேண்டும் என்று தி.மு.க.வினர் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
கொளத்தூர் சட்டமன்ற தொகுதி த.வெ.க. எம்.எல்.ஏ.வாக இருந்த வி.எஸ்.பாபு உடல்நலக்குறைவால் 70 நாட்களுக்கு மேல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நேற்று முன்தினம் மரணம் அடைந்தார்.
துர்கா ஸ்டாலின் தொடர்ச்சியாக அழுத்தம்
இதையடுத்து அந்த தொகுதி காலியாகி உள்ளது. இதனால், கொளத்தூர் சட்டமன்ற தொகுதி முதல் முறையாக இடைத்தேர்தலை சந்திக்க உள்ளது.

இப்போது இருக்கும் சூழல் தி.மு.க.வுக்கு சாதகமாக இருக்கும். எனவே கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் மீண்டும் போட்டியிட வேண்டும் என்று தி.மு.க.வினர் விரும்புகின்றனர். இதை கோரிக்கையாகவும் முன்வைக்கின்றனர்.
கொளத்தூர் தொகுதியில் மு.க. ஸ்டாலின் போட்டியிட வேண்டும் என அவரது மனைவி துர்கா ஸ்டாலின் தொடர்ச்சியாக அழுத்தம் கொடுத்து வருவதாக இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
ஆனால், திமுக வட்டாரங்கள் ஸ்டாலின் பெரும்பாலும் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட மாட்டார் எனக் கருத்து தெரிவிக்கின்றன.
இதில் 2011, 2016, 2021-ம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போட்டியிட்டு 3 முறை தொடர் வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |