பாடசாலை நாட்கள் குறைக்கப்படுமா ---! கல்வி அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு
Ministry of Education
A D Susil Premajayantha
Sri Lanka
Sri Lanka Fuel Crisis
By Sumithiran
பாடசாலை நாட்கள் குறைப்பு
தற்போதைய எரிபொருள் மற்றும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும் பாடசாலை நாட்களை குறைப்பதற்கான திட்டம் எதுவும் இல்லை என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
எரிபொருள் தட்டுப்பாடு காணப்பட்டாலும் பாடசாலைக்கு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் வருகை சிறந்த அளவில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எரிபொருள் நெருக்கடி
எரிபொருள் நெருக்கடியுடன் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு மத்தியில் ஆசிரியர்களையும், மாணவர்களையும் இரண்டு பிரிவுகளாக பிரித்து, வாரத்துக்கு தலா மூன்று தினங்கள் பாடசாலைக்கு அழைப்பதற்கு, அதிபர் – ஆசிரியர் தொழிற்சங்க ஒன்றியம் கல்வி அமைச்சிடம் யோசனை முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
