21ஆவது திருத்தம் நிறைவேற்றப்படாவிடின் வெளியேறுவோம்! அமைச்சர் திட்டவட்டம்
அரசாங்கத்தில் இருந்து வெளியேறுவோம்
மக்களின் அபிலாசைக்கு மதிப்பளித்து அரசியலமைப்பின் 21ஆவது சீர்திருத்தம் நிறைவேற்றப்படாவிடின் அரசாங்கத்தில் இருந்து விலகுவோம் என அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்தார்.
ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்துரைத்த அவர், "சகல கட்சிகளும் 21ஆவது திருத்தத்திற்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வு காணவே அமைச்சு பதவிகளை பொறுப்பேற்றுள்ளோம், எனவே புதிய அரசாங்கத்தில் அமைச்சு பதவிகளை பொறுப்பெற்றமை சுதந்திர கட்சிக்கு எவ்விதத்திலும் பாதிப்பை ஏற்படுத்தாது.
நாடு பாரிய நெருக்கடியினை எதிர்க்கொண்டிருக்கும் போது கட்சி மட்டத்தில் இருந்துக்கொண்டு அரசியல் செய்வது சிறந்ததாக அமையாது.
அரசியல் ஸ்திரத்தன்மையை பேண வேண்டும் என்பதற்காக, சம்பளம் பெறாமல் பதவியினை வகிக்க ஏற்றுக்கொண்டேன்", எனக் குறிப்பிட்டார்.
