நெருக்கடியை சமாளிக்க அர்ப்பணிப்புடன் செயற்படுவேன்! சர்வகட்சி மாநாட்டில் கோட்டாபய விடுத்த கோரிக்கை
Colombo
Economy
Gotabaya Rajapaksa
SriLanka
By Chanakyan
நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடிக்கு தீர்வை காண்பது குறித்து அர்ப்பணிப்புடன் உள்ளதாக அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச (Gotabaya Rajapaksa) சர்வகட்சி மாநாட்டில் தெரிவித்துள்ளார்.
சர்வகட்சி அரசியல் ஆதாயம் தேடுவதற்கான முயற்சி என தெரிவிக்கப்படுவதை அவர் நிராகரித்துள்ளார்.
இன்றைய சந்திப்பை தவிர்த்துள்ள அரசியல் கட்சிகள் எதிர்காலத்தில் நடைபெறவுள்ள அனைத்து கட்சி கூட்டத்தில் கலந்துகொள்ளவேண்டும் என அரச தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்த நெருக்கடிக்கு தீர்வை காண்பதற்கான பொறுப்பு அரசாங்கத்திற்கும் எதிர்க்கட்சிக்கும் உள்ளது.
மாநாட்டை புறக்கணித்த கட்சிகளின் யோசனைகளை செவிமடுக்க தயார் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி