கடும் வறட்சி வில்பத்து பூங்கா குளங்கள் வற்றின : பவுசர்கள் மூலம் நிரப்பப்படும் நீர்
தற்போது நிலவும் கடும் வறட்சியானது வில்பத்து தேசியப் பூங்காவையும் பாதித்துள்ளது. இதன் விளைவாக, கட்டப்பட்ட கொங்கிரீட் குளங்களுக்கு பவுசர்கள்மூலம் நீர் நிரப்ப முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பூங்கா காப்பாளர் ஆர்.டி.டி.டி. சமரநாயக்க தெரிவித்தார்.
வில்பத்து தேசிய பூங்காவின் கிழக்கு வலயத்தில் உள்ள மரதன்மடுவ, பெர்சிபெடிவ மற்றும் குக்குல்கடுவ குளங்களில் நீர் படிப்படியாக வறண்டு வருவதால், கொங்கிரீட் குளங்களுக்கு பவுசர்கள் மூலம் நீர் நிரப்பப்பட்டு வருவதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஏனைய குளங்களின் நீர்மட்டம்
இருப்பினும், வில்பத்து தேசிய பூங்காவின் மற்ற பகுதிகளில் அமைந்துள்ள குளங்களில் நீர்மட்டம் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளது என்றும், எதிர்காலத்தில் வறட்சி நிலைமை மோசமடைந்தால், நீர்மட்டமும் கணிசமாகக் குறையும் என்றும் பூங்கா காப்பாளர் சமரநாயக்க தெரிவித்தார்.

வில்பத்து தேசிய பூங்கா இலங்கையின் மிகப் பழமையான மற்றும் மிகப்பெரிய வனப் பூங்காவாகும். இது புத்தளம், அனுராதபுரம் மற்றும் மன்னார் ஆகிய மூன்று மாவட்டங்களின் நடுவில் அமைந்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |