வெட்கமா? பயமா? நாடாளுமன்றம் செல்ல தயங்கும் விமல் வீரவன்ச
parliament
Wimal Weerawansa
afraid
ashamed
By Sumithiran
அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதன் பின்னர் விமல் வீரவன்ச, ஒருமுறை கூட நாடாளுமன்ற அமர்வில் பங்கேற்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
ஆனால் அவர் நாடாளுமன்றத்தில் நடக்கும் குழுக் கூட்டங்களில் கலந்து கொண்டுள்ளதாக தெரியவருகிறது.
விமல் வீரவன்ச கடந்த மார்ச் மாதம் 3ஆம் திகதி அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட உதய கம்மன்பில மற்றும் அமைச்சர் பதவியிலிருந்து ஒதுங்கியிருப்பதாக கூறப்படும் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார ஆகியோர் அண்மையில் நாடாளுமன்றத்தில் பல அமர்வுகளில் பங்கேற்றிருந்தனர்.
அமைச்சுப் பதவியிலிருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோருக்கு நாடாளுமன்றத்தில் பின்வரிசையில் இரண்டு ஆசனங்கள் ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி