திறமையில்லை பறித்தோம் -மனம் திறந்தார் பசில்
விமல் வீரவங்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் அமைச்சுப் பதவிகளில் இருந்து நீக்கப்படுவதற்கு முக்கிய காரணம் அவர்களுக்கு வழங்கப்பட்ட அமைச்சுக்களில் அவர்கள் சரியாகச் செயற்படாமல் வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்தமையே என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஏனைய அமைச்சுக்களை விட அந்த அமைச்சுக்களுக்கு அதிக பணம் வழங்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
எனினும், பல சந்தர்ப்பங்களில், அமைச்சரவை கூட்டுப்பொறுப்பை மீறி அவர்கள் செயற்பட்டுள்ளனர், புத்திசாலிகள் காபட் வீதிகளை ஓட்டுபவர்கள் அல்ல, குண்டும் குழியுமான வீதிகளை ஓட்டுபவர்கள் என்றும் அவர் கூறினார்.
அமைச்சுக்களின் செயற்பாடுகள் உரிய முறையில் நடைபெறாததை அவதானித்து அவர்களது கையாலாகத்தனத்தை வெளிப்படுத்தியநிலையில் அவர்கள் அமைச்சுப் பதவியிலிருந்து நீக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை தமது அமைச்சுப்பதவி பறிப்பிற்கு நிதியமைச்சர் பசில் ராஜபக்சவே காரணமென மேற்கண்ட இருவரும் குற்றம்சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
