மீண்டும் விசாரணைக்கு வரும் விமல் வீரவங்சவுக்கு எதிரான வழக்கு!

srilanka case colombo court wimal
By S P Thas Mar 10, 2022 09:32 AM GMT
Report

2010-2014 ஆண்டு வரை அரச பொறியியல் கூட்டுத்தாபனம் பயன்படுத்திய சில வாகனங்கள் தொடர்பான விசாரணைக்கு எனக் கூறி, அந்த கூட்டுத்தாபனத்தின் தற்போதைய போக்குவரத்து முகாமையாளரை இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு இன்று விசாரணைக்கு அழைத்துள்ளது.

2010 முதல் 2014 ஆம் ஆண்டு வரை அரச பொறியியல் கூட்டுத்தாபனம், அன்றைய பொறியியல் சேவைகள், வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சராக பதவித்த விமல் வீரவங்சவின் பொறுப்பின் கீழ் இருந்தது.

2015 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த நல்லாட்சி அரசாங்கம், நிதி மோசடி விசாரணைப் பிரிவு என்ற பெயரில் புதிய பொலிஸ் பிரிவை உருவாக்கி, மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் ஊழல், மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படும் அரசியல்வாதிகளிடம் விசாரணைகளை நடத்தியது. அப்போது விமல் வீரவங்சவை நிதி மோசடி விசாரணைப் பிரிவின் பொலிஸார் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி இருந்தனர்.

பொறியியல் கூட்டுத்தாபனத்தின் வாகனங்களை தவறாக பயன்படுத்த உதவியதாக நீதிமன்றத்தில் வீரவங்சவுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. பொதுச் சொத்துக்கள் சட்டத்தின் கீழ் அப்போது விமல் வீரவங்ச கைது செய்யப்பட்டார்.

2017 ஆம் ஆண்டு ஜனவரி 10 ஆம் திகதி முதல் ஏப்ரல் 7 ஆம் திகதி வரை பிணை வழங்கப்படாது, வீரவங்ச தொடர்ந்தும் 87 நாட்கள் வெலிகடை சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில், தற்போதைய அரசாங்கத்தில் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களாக பதவி வகித்த விமல் வீரவங்சவும் உதய கம்மன்பிலவும் அண்மையில் ஜனாதிபதியால் அமைச்சு பதவிகளில் இருந்து நீக்கப்பட்டனர்.

அரசாங்கத்திற்குள் இருந்து கொண்டு அரசாங்கத்தின் மீது குற்றச்சாட்டுக்கள் மற்றும் விமர்சனங்களை முன்வைத்த காரணத்தினால், அவர்கள் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டனர்.

அவ்வாறான நிலைமையில், வீரவங்ச தொடர்ந்தும் அரசாங்கத்தின் நிதியமைச்சரான பசில் ராஜபக்சவுக்கு எதிராக கருத்துக்களை வெளியிட்டு வருகிறார். இவ்வாறான நிலையில், இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு, அரச பொறியியல் கூட்டுத்தாபனத்தின் போக்குவரத்து முகாமையாளரை விசாரணைக்கு அழைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் மேற்கு, Sheerness, United Kingdom

20 Mar, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Oberbuchsiten, Switzerland

20 Mar, 2014
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

19 Mar, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Calgary, Canada

18 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
மரண அறிவித்தல்

ஒமந்தை, திருநாவற்குளம்

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, கொழும்பு, Harrow, United Kingdom

18 Mar, 2022
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, சென்னை, India

17 Mar, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பெரியதம்பனை, கனடா, Canada

17 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கொழும்பு, கனடா, Canada

18 Mar, 2025
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026