ஊடக சந்திப்பில் சிகரெட்டை வாயில் வைத்த அமைச்சர்
srilanka
colombo
wimal weerawansa
press meet
By Vasanth
இலங்கையில் கறுவாவினால் தயாரிக்கப்பட்ட ஆயுர்வேத சிகரட் (கறுவா சிகரட்) நாட்டின் உற்பத்திகளில் பாரிய பங்களிப்பை செய்யும் என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
ஆயர்வேத சிகரட்டை அறிமுகம் செய்யும் நிகழ்வு, கிங்ஸ்பெரி ஹோட்டலில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
100 வீதம் இலங்கை கறுவாவினால் தயாரிக்கப்பட்டுள்ள இந்த சிகரட், லயன் ஹர்ட் என பெயரிடப்பட்டுள்ளது. செயற்கை பதார்த்தங்களினால் தயாரிக்கப்பட்ட சிகரட் பாவனையிலிருந்து மக்களை விடுவிக்க இதனூடாக இயலுமை காணப்படுகின்றது என அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டார்.
இதன்போது சிகரெட் அறிமுக நிகழ்வில் அமைச்சர் சிகரெட் ஒன்றை தனது வாயில் வைத்து ஊடகவியலாளர்களுக்கு காண்பித்தமையும் குறிப்பிடத்தக்கது.

