பிரதமர் மஹிந்த தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியை மீண்டும் மீண்டும் சீண்டும் விமல்!
இஸ்லாம் அடிப்படைவாதிகளுடன் இணைந்து செயற்பட விரும்புவோர் ரிசாத் பதியூதீனின் உண்மையான சுயரூபத்தை மறைத்துள்ளனர் என அமைச்சர் விமல் வீரவன்ச பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையின் உள்ளடக்கம் தொடர்பில் தகவல் வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது பேசிய அவர், இஸ்லாமிய அடிப்படைவாதிகளுடன் எதிர்காலத்தில் இணைந்து செயற்படும் சிந்தனையில் பொதுஜன பெரமுன கட்சிக்குள் சிலர் இருக்கின்றனர்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது போல இஸ்லாம் அடிப்படைவாத அமைப்புகள் கலகொட அத்தே ஞானசார தேரரால் உருவாகியுள்ளது என்றால், ஐஎஸ் அமைப்பும் உருவாக பொது பல சேனாவா காரணம்? இதேவேளை, ரிசாத் பதியூதீனின் சகோதரர் சஹரானுடன் தொலைபேசியில் உரையாடிய சாட்சியை பொலிஸாரே வௌியிட்டனர்.
பேராயரிடம் காண்பித்தனர். விடுதலை செய்யும் போது வியாபாரம் தொடர்பில் கதைத்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், இஸ்லாம் அடிப்படைவாதிகளுடன் இணைந்து செயற்பட விரும்புவோர் ரிசாத் பதியூதீனின் உண்மையான சுயரூபத்தை மறைத்துள்ளனர் என்றார்.