ரணிலுக்கு பெரும் வெற்றி! தமிழர் பகுதிகளிலும் வெடிக் கொழுத்தி கொண்டாட்டம் (படங்கள்)
Mullaitivu
Ranil Wickremesinghe
Sri Lankan political crisis
UNP
By Vanan
முல்லைத்தீவில் கொண்டாட்டம்
புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்க தெரிவாகியுள்ள நிலையில், முல்லைத்தீவில் வெடிக் கொழுத்தி ஆதரவாளர்கள் கொண்டாடியுள்ளனர்.
இலங்கை எட்டாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட அதிபராக நாடாளுமன்றில் இன்று ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்ட நிலையில், இவரது வெற்றியை நாடளாவிய ரீதியில் கட்சி ஆதரவாளர்கள் வெடிக் கொழுத்தி கொண்டாடி வருகின்றனர்.
அந்த வகையி, முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் நகரில் ஐக்கிய தேசியக் கட்சியின் புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர் முத்துசாமி முகுந்தகஜன் மற்றும் ஆதரவாளர்கள் வெடிக் கொழுத்தி கொண்டாடினர்.
ஹட்டனில் கொண்டாட்டம்
இதேவேளை, தமிழர்கள் செறிந்து வாழும் ஹட்டன் நகரிலும் இன்று மாலை ஆதரவாளர்கள் வெடிக் கொழுத்தி கொண்டாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.





31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்