தென்னிலங்கையில் தொடருந்தும் முச்சக்கரவண்டியும் மோதி விபத்து - ரஷ்ய பிரஜை உட்பட இருவர் உயிரிழப்பு..!
Colombo
Death
By Kiruththikan
காலி, ஹபராதுவ பிரதேசத்தில் இன்று முச்சக்கரவண்டியும் தொடருந்தும் மோதி விபத்துக்குள்ளானதில் ரஷ்ய பிரஜை உட்பட இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று காலை ஹபராதுவ, தலவெல்ல, மஹரம்ப தொடருந்து கடவைக்கு அருகில், உயிரிழந்தவர்கள் பயணித்த முச்சக்கர வண்டி தொடருந்தில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இதில் முச்சக்கரவண்டியின் சாரதியும், ரஷ்ய பெண் பயணியும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
வாகன சாரதிகளுக்கு அறிவித்தல்

தொடருந்து கடவையில் உள்ள தொடருந்து சமிக்யை இயங்காதது குறித்து வாகன சாரதிகளுக்கு அறிவித்தல் காட்சிப்படுத்தப்பட்டிருந்த நிலையிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
3ம் ஆண்டு நினைவஞ்சலி