இப்படியும் ஒரு வியாபாரம் - சிக்கினார் பெண்
arrest
police
woman
coconut
By Sumithiran
ரத்கம, பன்வில பிரதேசத்தில் நான்கு தேங்காய்களில் எட்டு கிராம் போதைப்பொருளுடன் பெண் ஒருவரை ரத்கம காவல்துறையினர் இன்று (18) கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர் தேங்காய் விற்பனை செய்கிறேன் என்ற போர்வையில் சில காலமாக தேங்காய்க்குள் போதைப்பொருளை மறைத்து வைத்திருந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
38 வயதுடைய சந்தேகநபர் இதற்கு முன்னர் பல தடவைகள் போதைப்பொருள் வைத்திருந்த போது கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் குறிப்பிட்டனர்.
சந்தேக நபரின் கணவரும் போதைப்பொருள் குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் நாளை (19ஆம் திகதி) காலி நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
ரத்கம காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி