யாழில் மாணவர்களுக்கு போதைபொருள் விற்பனை: பெண்ணொருவர் கைது
Drugs
By Shalini Balachandran
யாழில் மாணவர்களுக்கு போதைப்பாக்கு விற்பனை செய்த குற்றச்சாட்டில் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அச்சுவேலி மற்றும் வல்லை பகுதிகளில் மாணவர்களை இலக்கு வைத்து போதைப் பாக்கு விற்பனையில் பெண்ணொருவர் ஈடுபட்டுள்ளார்.
இது தொடர்பாக கிடைக்கபெற்ற இரகசிய தகவல் அடிப்படையில் அச்சுவேலி காவல்துறையினர் குறித்த பெண்ணை கைது செய்ததாக குறிப்பிட்டுள்ளனர்.
கஞ்சா
பெண்ணை கைது செய்யும் போது அவரது உடைமையில் இருந்து ஒன்றரை லீட்டர் கசிப்பு மற்றும் கஞ்சா கலந்த மாவா பாக்கு ஒரு தொகை என்பன கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக தேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்