தமிழர் பகுதியொன்றில் சட்டவிரோத கசிப்பு தயாரிப்பில் ஈடுபட்ட 7 பேர் கைது
மட்டக்களப்பில் (Batticaloa) கஞ்சா மற்றும் சட்டவிரோத கசிப்பு தயாரிப்பு விற்பனையில் ஈடுபட்ட பெண் ஒருவர் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பு தலைமையக காவல்துறையினர் இன்று (12) மேற்கொண்ட விசேட யுக்திய நடவடிக்கையின் போதே குறித்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது, 5 ஆயிரம் மில்லிலீற்றர் கசிப்பு 20 ஆயிரம் மில்லிலீற்றர் கோடா என்பன காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளன.
நீதிமன்ற பிடியாணை
ஊறணி அம்பிறோஸ் வீதியிலுள்ள போதை வியாபரிகளின் வீடுகளை முற்றுகையிட்ட போது கசிப்பு வியாபாரத்தில் ஈடுபட்ட பெண் ஒருவரை 5 ஆயிரம் மில்லி லீற்றர் கசிப்புடனும் கசிப்பு தயாரித்த ஒருவரை 20 ஆயிரம் மில்லி லீற்றர் கோடாவுடனும் 5 மில்லிக்கிராம் கஞ்சாவுடன் ஒருவரையும் மற்றும் நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 4 பேர் உட்பட 7 பேரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |