கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் சட்டவிரோத போதைப்பொருளுடன் பெண் கைது
ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் பெண்ணொருவர் கிராண்ட்பாஸ் பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
களனி பிரிவுக்குட்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது, சந்தேகநபரிடமிருந்து ஒரு கிலோ 45 கிராம் ஐஸ் போதைப்பொருளும், ஒரு கிலோ 86 கிராம் ஹெரோயினும் கைப்பற்றப்பட்டுள்ளன.
8 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய்
மேலும், மின்னணு தராசு, போதைப்பொருள் விற்பனை மூலம் ஈட்டப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் 8 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் கையடக்கத் தொலைபேசி ஒன்றும் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்டவர் கிராண்ட்பாஸ் பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய பெண் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபரை மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |