சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட தங்க நகைகளுடன் பெண் ஒருவர் கட்டுநாயக்கவில் கைது
Bandaranaike International Airport
Gold
By Dharu
சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட நகைகள் அடங்கிய பொதியுடன் பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.
விமான நிலைய காவல் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர், அங்கொடை, பகுதியில் வசித்து வந்த 38 வயது பெண் தொழிலதிபர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முப்பத்தாறு மில்லியனுக்கும் அதிகம்
சந்தேக நபர் நேற்று (28) துபாயிலிருந்து சிறிலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் UL-226 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்தடைந்துள்ளார்.

இவ்வாறு கண்டெடுக்கப்பட்ட நகைகளின் மதிப்பு முப்பத்தாறு மில்லியனுக்கும் அதிகம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் குறித்த சந்தேகசபர் மேலதிக விசாரணைக்காக நகைகளைக் கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.