தென்னிலங்கையில் அதிரடியாக கைது செய்யப்பட்ட தமிழ் யுவதி
கொழும்பிலுள்ள (Colombo) தொழிலதிபரின் வீட்டில் பணிப்பெண்ணாக வேலை செய்து வந்த பெண்ணொருவர் திருட்டு சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
மஸ்கெலியா பகுதியை சேர்ந்த சிவசுந்தரம் சிவரஞ்சனி என்ற 23 வயதுடைய பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில்,கைது செய்யப்பட்ட குறித்த பெண் நேற்று (28) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
இரண்டு பிள்ளைகள்
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த பெண் வீட்டிற்கு வேலைக்கு வந்து நான்கு மாதங்களுக்குப் பிறகு ஏப்ரல் ஒன்பதாம் திகதி விடுமுறையில் சென்றுள்ளார்.
இந்த சந்தர்ப்பத்தில் வெளிநாட்டில் இருந்து இலங்கை வந்த தொழிலதிபரின் இரண்டு பிள்ளைகள் 20 நாட்களில் மீண்டும் வெளிநாடு செல்லத் தயாராகியுள்ளனர்.
இதன் போது தந்தை தனது பிள்ளைகளுக்கு பரிசாக வழங்க வைத்திருந்த இரண்டு மதிப்புமிக்க கைக்கடிகாரங்களை தேடிய போது, அவை காணாமல் போனதைக் கண்டு காவல்துறையினரிடம் முறையிட்டுள்ளனர்.
பணிப்பெண்ணாக வேலை
இதையடுத்து, நான்கு மாதங்களுக்கு முன்பு தனது வீட்டில் பணிப்பெண்ணாக வேலைக்கு வந்த இளம் பெண் விடுப்பில் சென்றுவிட்டு வேலைக்குத் திரும்பவில்லை எனவும் தனது தொலைபேசி அழைப்புகளுக்கு பதிலளிக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன் பின் தொடர்ந்த விசாரணையில் வீட்டில் இருந்து ஒரு கோடி 34 லட்சத்து 50 ஆயிரம் பெறுமதியான கைக்கடிகாரங்கள் இரண்டு மற்றும் 500 ஸ்டெர்லிங் பவுண்ட் ஆகியவை திருடப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
பின்பு, குறித்த பெண் கைது செய்யப்பட்டு நேற்று (28) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, எதிர்வரும் மே மாதம் ஐந்தாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
