உந்துருளியில் இருந்து தவறி விழுந்து கர்ப்பிணி பெண் உயிரிழப்பு..! யாழில் சம்பவம்
Sri Lankan Tamils
Jaffna
Sri Lanka Police Investigation
By Kiruththikan
யாழ்ப்பாணம் காரைநகர் பொன்னாலை பாலத்தில் உந்துருளியில் இருந்து தவறி விழுந்து கர்ப்பிணி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் – காரைநகரில் இருந்து மூளாய் வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக கணவருடன் சென்ற குறித்த பெண் உந்துருளியின் பின்னால் இருந்து பயணித்த வேளை காரைநகர் பாலத்தடியில் அவர் திடீரென தவறி விழுந்து தலை அடிபட்டு உயிரிழந்துள்ளார்.
காரைநகர் சிவகாமி அம்மன் கோயில் பகுதியை சேர்ந்த 24 வயதுடைய பெண் ஒருவரே உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

2ம் ஆண்டு நினைவஞ்சலி