காட்டுயானை தாக்கியதில் உயிரிழந்த இளம் பெண் - இளைஞன் படுகாயம்
By pavan
கொஸ்லந்த, தியலும நீர்வீழ்ச்சிக்கு அருகில் முகாமிட்டிருந்த தம்பதியரை இன்று (12) அதிகாலை காட்டு யானை தாக்கியதில் யுவதி ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், இளைஞன் பலத்த காயமடைந்துள்ளார்.
மாத்தறை கெகுனதொர பிரதேசத்தில் வசித்து வந்த 23 வயதுடைய ஜி தருஷி என்ற யுவதியே குறித்த சம்பவத்தில் உயிரிழந்த நிலையில், வாரியபொல பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய கே.ஏ.தனுஷ்க என்பவரே காயமடைந்துள்ளார்.
இவர்கள் கொஸ்லந்தவில் உள்ள தியலும பகுதிக்கு சுற்றுலா சென்று இரவு முகாமிட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
காவல்துறையினர் விசாரணை
யுவதியை தாக்கிய காட்டு யானை அதே இடத்தில் சுற்றித் திரிந்ததாகவும், குழுவுடன் வந்த அனைவரையும் விரட்டியடித்ததாகவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
பின்னர், அப்பகுதி மக்களுடன் இணைந்து காவல்துறையினர் மிகுந்த முயற்சியுடன் யானையை விரட்டினர்.


புத்திர சோகத்தில் ஈழ அன்னையர்கள்... இன்று அன்னையர் தினம்… 14 மணி நேரம் முன்

உலகமெங்கும் உழைப்பால் தடம் பதிக்கும் ஈழத் தமிழர்கள்
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்