ரணிலுக்காக எரிக்சொல்ஹெய்ம் செய்த சதி
முன்னாள் ஜனாதிபதி ரணில் கைது செய்யப்பட்டுள்ளமை தென்னிலங்கையில் மட்டுமல்லாமல் முழு நாட்டிலும் பாரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
அரசு நிதிகளை தவறாக பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் அவர் சிஐடி யினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
2023 ஆம் ஆண்டு அவர் இங்கிலாந்தில் தனது மனைவியின் பட்டம் வழங்கும் விழாவில் கலந்து கொள்வதற்காகப் பயணத்திற்கு, அதிகமாக 16.9 மில்லியன் ரூபாய் நிதி பாவித்ததாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், முன்னாள் ஜனாதிபதியை விடுதலை செய்யுமாறு பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், நோர்வேயின் முன்னாள் காலநிலை மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம்வும் சிறிலங்கா அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
எரிக் சொல்ஹெய்ம் நோர்வே வெளிவிவகார அமைச்சராகவும், இலங்கை அமைதி செயன்முறையின் முக்கிய நடுவராகவும் இருந்தார்.
ரணில் விக்கிரமசிங்க 2001–2004 இடையே பிரதமராக இருந்தபோது, சொல்ஹெய்ம் தலைமையில் நோர்வே- மூலமாக்கப்பட்ட அமைதிப் பேச்சுவார்த்தைகள் நடந்தன.
2002 ஆம் ஆண்டு இலங்கை அரசு– LTTE இடையே போர்நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்த நிலையில், ரணிலுக்காக எரிக்சொல்ஹெய்ம் செய்த சதி மற்றும் பல உண்மை தகவல்களை தாங்கி வருகிறது ஐபிசி தமிழின் இன்றைய அதிர்வு.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

