யாழில் பாம்பு தீண்டி மூன்று பிள்ளைகளின் தாய் உயிரிழப்பு
Jaffna
Sri Lanka
Sri Lanka Police Investigation
By Laksi
யாழ்ப்பாணம் (Jaffna) - வடமராட்சி கிழக்கு பகுதியில் பாம்பு தீண்டியதில் மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவமானது நேற்று (27) வடமராட்சி கிழக்கு - ஆழியவளை, கொடுக்குளாயில் இடம்பெற்றுள்ளது.
குறித்த பகுதியை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயான திருநாவுக்கரசு புனிதசோதி என்பவரே இவ்வாறு பாம்பு தீண்டியதில் உயிரிழந்துள்ளார்.
மேலதிக விசாரணை
சம்பவ தினமன்று காலை வீட்டின் நிலப்பகுதியை துப்பரவு செய்து கொண்டிருந்த வேளை பனை ஓலைக்குள் மறைந்திருந்த பாம்பு தீண்டியதாகவும் சம்பவ இடத்திலையே குறித்த தாய் உயிரிழந்ததாகவும் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து பிரேத பரிசோதனையின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மேலும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மருதங்கேணி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்