பளையில் சற்றுமுன்னர் விபத்து : பெண் ஸ்தலத்தில் பலி
Kilinochchi
Sri Lanka Police Investigation
Accident
Death
By Erimalai
கிளிநொச்சி பளை காவல்துறை பிரிவிற்கு உட்பட்ட பளை நகர் பகுதியில் சற்றுமுன் இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்தில் சோரன்பற்று பகுதியைச் சேர்ந்த குமாரசாமி செல்வவதி என்கின்ற 63 வயதுடைய பெண்ணே சம்பவ இடத்தில் உயிரிழந்தவராவார்.
டிப்பர் -மோட்டார் சைக்கிள் மோதல்
யாழ்ப்பாணத்திலிருந்து பளை நோக்கிச் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளும், பளையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்று கொண்டிருந்த டிப்பர் வாகனமும், விபத்திற்குள்ளாகியுள்ளது

டிப்பர் வாகனத்தின் ஓட்டுநர் பளை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக விசாரணைகளை பளை காவல்துறையினர்மேற்கொண்டு வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
இரண்டுமுறை பாரிய படுகொலைகளைச் சந்தித்த கொக்கட்டிச்சோலை… 4 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி