கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய நபர்
சுமார் 45 இலட்சம் பெறுமதியுடைய வெளிநாட்டுத் தயாரிப்பு சிகரெட் தொகையை சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்
கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து வெளியேற முயன்ற வேளை குறித்த நபர் இன்று (29.01.2026) வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
புத்தளம், கல்பிட்டியைச் சேர்ந்த 43 வயதுடைய மீனவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
நீதிமன்றத்தில் முன்னிலை
அவர் வியாழக்கிழமை (29) அன்று Gulf Air விமானம் G.9-587 மூலம் ஷார்ஜாவிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்திருந்தார்.

சந்தேக நபர் கொண்டு வந்த இரண்டு பயணப் பொதிகளுக்குள் இருந்து 30,000 வெளிநாட்டுத் தயாரிப்பு "மான்செஸ்டர்" மற்றும் "பிளாட்டினம்" வகை சிகரெட்டுகள் அடங்கிய 150 அட்டைப்பெட்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளது.
சந்தேக நபர் தற்போது காவல்துறை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் எதிர்வரும் 5ஆம் திகதி சந்தேக நபர் நீர்கொழும்பு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தியாக தீபத்திற்கான மெய்யான அஞ்சலி, தமிழர் ஒற்றுமையுடனும் நேர்மையுடனும் இருப்பதாகும்... 22 மணி நேரம் முன்