தேர்தல் பணிக்காக வந்த பெண் அதிகாரிக்கு நேர்ந்த துயரம்
பேராதனை காவல்துறை பிரிவில் உள்ள கன்னொருவ ஜூனியர் கல்லூரியில் தேர்தல் பணிக்காகச் சென்ற பெண் அரசாங்க அதிகாரி ஒருவர் திடீர் சுகவீனம் காரணமாக பேராதனை போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
அவர் இன்று (05) மாலை 5.00 மணியளவில் தேர்தல் பணிக்காக வந்திருந்தார், மேலும் அந்த அதிகாரி கன்னொருவ தாவர மரபணு வள மையத்தில் ஒரு மேம்பாட்டு அதிகாரியாக பணியாற்றுபவர் என காவல்துறையினர் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் கலகெதர, மினிகமுவ பகுதியைச் சேர்ந்த கிருஷாந்தி குமாரி தசநாயக்க (33) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
காவல்துறையினர் மேலதிக விசாரணை
சம்பவம் தொடர்பில் பேராதனை காவல்துறையினர்மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை யாழ்ப்பாணத்தில் (Jaffna) தேர்தல் கடமையில் ஈடுபட்டிருந்த காவல்துறை உத்தியோகத்தர் ஒருவரும் திடீரென ஏற்பட்ட மயக்கம் காரணமாக உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
