ஜப்பான் நிலநடுக்கம் : 5 நாட்களின் பின் உயிருடன் மீட்கப்பட்ட 90 வயது மூதாட்டி
ஜப்பானைத் தாக்கிய நிலநடுக்கத்தால் 126 பேர் பலியாகியுள்ள நிலையில், 124 மணி நேரத்திற்கு பிறகு 90 வயது மூதாட்டி உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இஷிகவா மாகாணம் சுஸு நகரத்தில் வாழ்ந்துவருகிற மூதாட்டியே இவ்வாறு 5 நாட்களுக்குப் பிறகு நேற்று (06) மீட்கப்பட்டுள்ளார்.
இருப்பினும் நிலநடுக்கத்தின்போது கொதிநீர் பட்ட காயங்களுடன் மீட்கப்பட்ட 5 வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
தொடரும் மீட்பு பணிகள்
வீதி மட்டத்திற்கு வீட்டின் கூரைகள் தகர்ந்த நிலையில் மழையும் பனிப்பொழிவும் இன்னும் மீட்பு பணிகளை மேற்கொள்வதற்கு சிக்கலாக அமைந்துள்ளது.
இந்நிலையில் 200இற்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயுள்ள நிலையில், விமானங்கள் மற்றும் படகுகள் மூலமான மீட்புப் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
ஜப்பானில் ஏற்பட்ட இந்த அனர்த்தத்திற்கு வடகொரியா அனுதாபம் தெரிவித்துள்ளதுடன் ஜப்பானுக்கு உதவி வழங்குவதற்கு அமெரிக்கா முன்வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |