11 வருட போதைப்பொருள் விற்பனை! காத்தான்குடியில் பெண்ணொருவருக்கு நீதிமன்றின் அதிரடி உத்தரவு
காத்தான்குடியில் 11 வருடங்களாக போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த 6 கிராம் ஜஸ் போதை பொருளுடன் கைது செய்யப்பட்ட பிரபல பெண் போதை பொருள் வியாபாரியை எதிர்வரும் 5ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த உத்தரவானது, மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவானால் இன்று ஞாயிற்றுக்கிழமை (28) பிறப்பிக்கப்பட்டுள்ளது.
காவல்தறை கிடைத்த தகவல் ஒன்றினை அடுத்து காத்தான்குடி 6ம் பிரிவு ஜின்னா மாவத்தையிலுள்ள வீடு ஒன்றை கடந்த 22ம் திகதி காவல்துறையினர் முற்றுகையிட்டு போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த பெண் வியாபாரியை 6 கிராம் ஜஸ் போதை பொருளுடன் கைது செய்தனர்.
கைது நடவடிக்கைகள்
பின்னர் விசாணையில், அவர் வழங்கிய தகவலுக்கு அமைய காத்தான்குடி பகுதியைச் சேர்ந்த 4 பேரை ஜஸ் போதை பொருளுடன் கைது செய்து நீதிமன்றில் முற்படுத்தப்பட்டதுடன், அவர்களையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இதேவேளை, கைது செய்யப்பட்ட பெண் வியாபாரி கடந்த 11 வருடங்களாக போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளதாகவும் இதுவரை அவர் இருந்த காவல்துறையினர் அவரை கைது செய்யவில்லை ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
நீதிமன்ற உத்தரவு
இந்த நிலையில் குறித்த பெண் வியாபாரியை இன்று ஞாயிற்றுக்கிழமை வரை 5 நாட்கள் காவல்துறை தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்ய நீதிமன்ற அனுமதியுடன் விசாரணை செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, இன்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் முற்படுத்தியதையடுத்து அவரை எதிர்வரும் 5 ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
