விசாரணை அதிகாரிகளுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ள மனம்பேரியின் செயல்
CID - Sri Lanka Police
SLPP
Sri Lankan Peoples
By Dilakshan
தற்போது காவலில் உள்ள சம்பத் மனம்பேரி, தனது இரண்டு கையடக்கத் தொலைபேசிகளையும் அழித்துவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேற்கு வடக்கு குற்றப்பிரிவு விசாரணையில் இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது.
அதன்படி, அழிக்கப்பட்ட சாதனங்களுடன் இணைக்கப்பட்ட எண்கள் குறித்து மேலும் பகுப்பாய்வு நடைபெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தடுப்பு காவல்
இந்த நிலையில், சிறிலங்கா பொதுஜன பெரமுன முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் மனம்பேரியை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மித்தேனியாவில் ஐஸ் என்ற போதைப்பொருளை தயாரிக்கப் பயன்படுத்தப்படும் ரசாயனங்கள் கண்டுபிடிக்கப்பட்ட வழக்கில் அவர் இரண்டாவது சந்தேக நபர் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
